Load Image
dinamalar telegram
Advertisement

சிந்து, பிரனாய் தோல்வி: மலேசிய பாட்மின்டன் காலிறுதியில்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, பிரனாய் தோல்வியடைந்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 750' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனதைபேயின் டிசூ யிங் டை டெய் மோதினர். முதல் செட்டை 21-13 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 15-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர், 13-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 53 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 21-13, 15-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



பிரனாய் ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். முதல் செட்டை 18-21 என இழந்த பிரனாய், இரண்டாவது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 44 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய பிரனாய் 18-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement