Load Image
dinamalar telegram
Advertisement

காலிறுதியில் சிந்து, பிரனாய் * மலேசிய பாட்மின்டனில்...

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து, பிரனாய் முன்னேறினர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 750' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் பிட்டயாபார்னை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 19-21 என இழந்தார். பின் எழுச்சி பெற்ற இவர் அடுத்த இரு செட்டுகளை 21-9, 21-14 என வசப்படுத்தினார். 57 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 19-21, 21-9, 21-14 என வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

பிரனாய் அபாரம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், 'நம்பர்-21' வது வீரர், இந்தியாவின் பிரனாய், சீன தைபேவின் தியன் செனை சந்தித்தார். இதில் பிரனாய் 21-15, 21-7 என வென்று சாய்த்து காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப், 19-21, 10-21 என தாய்லாந்தின் கன்லாவ்ட்டிடம் வீழ்ந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி காயம் காரணமாக விலகிக் கொண்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement