கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, காஷ்யப் வெற்றி பெற்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 750' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவோங் மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல், அமெரிக்காவின் இரிஸ் வாங் மோதினர். இதில் ஏமாற்றிய செய்னா 11-21, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யப், தென் கொரியாவின் கிவாங் ஹீ ஹியோ மோதினர். இதில் அசத்திய காஷ்யப் 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சுமீத் ரெட்டி ஜோடி 15-21, 21-19, 17-21 என்ற கணக்கில் நெதர்லாந்தின் ராபின் டேபிலிங், செலினா பீக் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பாட், ஷிகா கவுதம் ஜோடி 11-21, 14-21 என, ஜப்பானின் மாயு மட்சுமோடோ, வகானா நாகாஹரா ஜோடியிடம் வீழ்ந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!