Load Image
dinamalar telegram
Advertisement

அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா * புரோ ஹாக்கி தொடரில் அசத்தல்

ரோட்டர்டாம்: புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் ஹாக்கி தொடரின் மூன்றாவது சீசன் நடத்தப்படுகிறது. இந்தியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டி முடிவில் அர்ஜென்டினா அணி (14 போட்டி, 12 வெற்றி, 2 'டிரா') 38 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.

நேற்று நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது. போட்டியின் 27வது நிமிடத்தில் அமெரிக்காவின் கிரகா டேனியலி, ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 0-1 என பின்தங்கியது.

திடீர் எழுச்சி

இரண்டாவது பாதி துவங்கியதும் எழுச்சி பெற்ற இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். போட்டியின் 31வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை தீப் கிரேஸ் கோலாக மாற்றினார். இதே நிமிடம் மீண்டும் அசத்திய இந்தியாவின் நவ்னீத் கவுர், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார்.

39வது நிமிடம் இந்தியாவின் சோனிகா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். 45வது நிமிடம் அமெரிக்காவின் நடாலியே ஒரு கோல் அடித்தார். 49வது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா ஒரு கோல் அடித்து அசத்தினார். முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி, இதுவரை விளையாடிய 13 போட்டியில் 7 வெற்றி, 2 'டிரா', 4 தோல்வியுடன் என, 27 புள்ளி பெற்று பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement