ஜகார்த்தா: இந்தியாவின் சிந்து, செய்னா, லக்சயா பங்கேற்கும் இந்தோனேஷிய பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. உலகத் தரவரிசையில் 'நம்பர்-32' இடத்திற்குள் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் தான் பங்கேற்பர் என்பதால் இந்தியாவின் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) வென்ற இவர், இந்த ஆண்டு சையது மோடி, சுவிட்சர்லாந்து தொடரில் மட்டும் கோப்பை வென்ற சிந்து, முன்னணி வீராங்கனைகளுக்கு எதிராக சொதப்புகிறார்.
அடுத்த மாதம் காமன்வெல்த் வரவுள்ள நிலையில் சிந்து எழுச்சி பெறுவார் என நம்பலாம். இத்தொடரில் 7வது இடத்தில் உள்ள சிந்து, முதல் சுற்றில், சீனாவின் பிங் ஜியாவோவை சந்திக்கிறார். இதில் வென்றால் கடினமான ஆன் செ யங்கை (தென் கொரியா) எதிர்கொள்ள வேண்டும்.
லக்சயா நம்பிக்கை
ஆண்கள் பிரிவில் தாமஸ் கோப்பை தொடரில் அசத்திய உலகின் 'நம்பர்-8' வீரர் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த், பிரனாய், சாய் பிரனீத் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்வித்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, முதல் சுற்றில் தென் கொரியாவின் சோய் சோல், கிம் வான் ஜோடியை சந்திக்கவுள்ளது. பெண்கள் இரட்டையர் அஷ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, திரீஷா-காயத்ரி ஜோடியும் பங்கேற்கின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!