ஹில்லேராட்: டென்மார்க் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், 2வது இடம் பிடித்தார்.
டென்மார்க்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீனதைபேயின் சியா ஹங் லுா மோதினர். முதல் செட்டை 18-21 என இழந்த கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டை 11-21 எனக் கோட்டைவிட்டார்.
மொத்தம் 31 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய கிரண் ஜார்ஜ் 18-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!