Load Image
dinamalar telegram
Advertisement

சிந்து, லக்சயா ஏமாற்றம் * காலிறுதியில் தோல்வி

ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென் தோல்வியடைந்தனர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-9' வீரர், இந்தியாவின் லக்சயா சென், சீன தைபேவின் தியன் செனை சந்தித்தார். முதல் செட்டை லக்சயா 16-21 என இழந்த லக்சயா, அடுத்த செட்டை 21-12 என கைப்பற்றினார்.

மூன்றாவது, கடைசி செட்டில் ஏமாற்றிய லக்சயா 14-21 என கோட்டை விட்டார். ஒரு மணி நேரம் 2 நிமிடம் நடந்த போட்டி முடிவில் லக்சயா சென் 16-21, 21-12, 14-21 என்ற செட்கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

எளிதாக வீழ்ந்தார்

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-4' வீராங்கனை இந்தியாவின் சிந்து, 'நம்பர்-5', தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனானை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 12-21 என எளிதாக இழந்தார். இரண்டாவது செட்டில் மீண்டு வருவார் என நம்பப்பட்டது. மாறாக இம்முறை 10-21 என நழுவவிட்டார்.

33 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 21-21, 10-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement