ஹில்லேராட்: டென்மார்க் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ரிதுபர்னா, சிராக் சென் தோல்வியடைந்தனர்.
டென்மார்க்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸ், அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வால் மோதினர். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ரிதுபர்னா 21-9, 18-21, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அதிதி பட் 13-21, 21-19, 14-21 என சீனதைபேயின் வென் சியிடம் வீழ்ந்தார். இந்தியாவின் அனுரா பிரபுதேசாய் 22-24, 17-21 என சீனதைபேயின் சியாங் டி லின்னிடம் தோல்வியடைந்தார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் தன்யா ஹேம்நாத், இரா சர்மா, ருத்விகா ஷிவானி, சமியா இமாத் பரூகி வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-17, 21-15 என சீனதைபேயின் ஹயோ லீ சியாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிராக் சென் 9-21, 13-21 என டென்மார்க்கின் கிம் புரூனிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சிறில் வர்மா 19-21, 19-21 என மலேசியாவின் ஜூன் வெய் சியமிடம் வீழ்ந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!