Load Image
dinamalar telegram
Advertisement

காலிறுதியில் சிந்து, லக்சயா * இந்தோனேஷிய பாட்மின்டன் தொடரில்

ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-9' வீரர், இந்தியாவின் லக்சயா சென், 13வது இடத்திலுள்ள டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை சந்தித்தார். முதல் செட்டை லக்சயா 21-18 என கைப்பற்றினார். தொடர்ந்த அசத்திய இவர் அடுத்த செட்டையும் 21-15 என வசப்படுத்தினார்.

54 நிமிடம் நடந்த போட்டி முடிவில் லக்சயா சென் 21-18, 21-15 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

போராடிய சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து, இந்தோனேஷியாவின் கிரிகோரிகா மரிஸ்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 23-21 என போராடி வென்றார். அடுத்த செட்டை 20-22 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், மூன்றாவது, கடைசி செட்டை 21-11 என எளிதாக வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 23-21, 20-22, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சுமீத் ரெட்டி ஜோடி 18-21, 13-21 என, 'நம்பர்-2' ஜோடியான ஜெங் வெய், ஹுவாங் குயாங் ஜோடியிடம் வீழ்ந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement