Load Image
dinamalar telegram
Advertisement

இரண்டாவது சுற்றில் சிந்து, லக்சயா

ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-9' வீரர், இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியனை சந்தித்தார். இதற்கு முன் இவருக்கு எதிரான 2 போட்டியிலும் தோற்ற லக்சயா, இம்முறை 21-10, 21-18 என்ற நேர் செட்கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா, இந்தோனேஷியாவின் ஷிகோ ஆராவிடம் 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

சபாஷ் சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவிவ் சிந்து, டென் மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென் மோதினர். இதன் முதல் செட்டை சிந்து 18-21 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர் அடுத்த செட்டை 21-15 என வென்று பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது செட்டையும் சிந்து 21-11 என கைப்பற்றினார்.

முடிவில் சிந்து 18-21, 21-15, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement