ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் முதல் போட்டியில் அஷ்வினி ஜோடி வெற்றி பெற்றது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சுமீத் ரெட்டி ஜோடி, ஜப்பானின் யுஜிரோ, சாவோரி ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 17-21, 21-18, 21-14 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று, அடுத்த போட்டிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி, தாய்லாந்தின் ஸ்ரதாவை சந்தித்தார். இதில் ஆகர்ஷி 21-13, 21-9, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி போட்டியில் இந்தியாவின் கார்த்திகே குமார், 16-21, 21-9, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி, 18-21, 9-21 என இந்தோனேஷியாவின் புஷ்பிடா, ராட்செல் ஜோடியிடம் வீழ்ந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!