Load Image
dinamalar telegram
Advertisement

சாதிப்பரா சிந்து, லக்சயா * இந்தோனேஷிய பாட்மின்டன் தொடரில்

ஜகார்த்தா: சிந்து, செய்னா, லக்சயா உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்தோனேஷிய பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. வரும் ஜூலை 28ல் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு துவங்கவுள்ள நிலையில் இந்தோனேஷிய தொடரில் இந்திய நட்சத்திரங்கள் சாதித்துக் காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

ஆண்கள் பிரிவில் உலகின் 'நம்பர்-9' வீரர் இந்தியாவின் லக்சயா சென், முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியனை சந்திக்கிறார். இதற்கு முன் இவருக்கு எதிரான 2 போட்டியிலும் தோற்ற லக்சயா, இம்முறை மீண்டுவர முயற்சிக்கலாம்.

தாமஸ் கோப்பை தொடரில் சாதித்த ஸ்ரீகாந்த் இல்லாத நிலையில், காஷ்யப், சமீர் வர்மா, பிரனாய் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிக்கலில் செய்னா

ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) வென்ற இந்தியாவின் சிந்து, பெண்கள் பிரிவு முதல் சுற்றில் டென் மார்க்கின் லின் கிறிஸ்டோபர்செனை சந்திக்க உள்ளார். தகுதிச்சுற்று முகாமில் பங்கேற்காத இந்தியாவின் செய்னா நேவலும், முதல் சுற்றில் டென்மார்க்கின் லினை எதிர்கொள்கிறார். இதில் வென்றால் இரண்டாவது சுற்றில் 2016 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்கள் இரட்டையரில் மானு அட்ரி, சுமீத் ரெட்டி ஜோடி களமிறங்குகிறது. பெண்கள் இரட்டையரில் 'நம்பர்-22' இடத்திலுள்ள இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி நம்பிக்கை தருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement