Load Image
dinamalar telegram
Advertisement

மாளவிகா இரண்டாவது இடம்

ரோம்: இத்தாலி ஓபன் தொடரில் மாளவிகா இரண்டாவது இடம் பிடித்தார்.

இத்தாலியில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் இளம் வீராங்கனை மாளவிகா 22, பங்கேற்றார். முதல் சுற்றில் கனடாவின் தாலியாவை வென்ற மாளவிகா, அடுத்தடுத்த போட்டிகளில் தாய்லாந்தின் பிட்சமான், இந்தியாவின் தான்யாவை வென்றார்.

அரையிறுதியில் சிங்கப்பூரின் இன்ஸ்யிராவை சந்தித்தார்.

இதில் மாளவிகா 11-21, 25-23, 21-13 என போராடி வென்று பைனலுக்குள் நுழைந்தார். பைனலில் மாளவிகா, சீன தைபேவின் வென் சி ஹிசுவை எதிர்கொண்டார். இதில் மாளவிகா 9-21, 11-21 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement