Load Image
dinamalar telegram
Advertisement

பிரமோத், தில்லான் 'தங்கம்': பக்ரைன் பாரா பாட்மின்டனில்

மனாமா: பக்ரைன் பாரா பாட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத், தருண் தில்லான் தங்கம் வென்றனர்.

பக்ரைனில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச 'பாரா' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்., 3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், பிரிட்டனின் டேனியல் பெத்தல் மோத இருந்தனர். ஆனால், காயம் காரணமாக பிரிட்டன் வீரர் விலகியதால் பிரமோத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கம் வென்றார்.



கலப்பு இரட்டையர் 'எஸ்.எல்., 3 - எஸ்.யு., 5' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், மணிஷா ராம்தாஸ் ஜோடி 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் சிறிபோங், நிபாடா ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.



ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்., 4' பிரிவு பைனலில் இந்தியாவின் தருண் தில்லான், தென் கொரியாவின் கெயுங் ஹவான் ஷின் மோதினர். இதில் தருண் தில்லான் 21-9, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.



ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல்., 3 - எஸ்.எல்., 4' பிரிவு பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், தருண் தில்லான் ஜோடி 21-13, 21-7 என தாய்லாந்தின் மங்கோன் புன்சன், சிறிபோங் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.



பெண்கள் இரட்டையர் 'எஸ்.எல்., 3 - எஸ்.யு., 5' பிரிவு பைனலில் இந்தியாவின் மணிஷா ராம்தாஸ், மன்தீப் கவுர் ஜோடி 21-11, 21-11 என, சகநாட்டை சேர்ந்த பாலக் கோஹ்லி, பருல் ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.



பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எச்., 6' பிரிவு பைனலில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி 21-15, 21-15 என பிரிட்டனின் ரேச்சல் சோங்கை வென்றார்.



இத்தொடரில் இந்தியாவுக்கு 7 தங்கம், 3 வெள்ளி, 13 வெண்கலம் என, மொத்தம் 23 பதக்கங்கள் கிடைத்தன.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement