Load Image
dinamalar telegram
Advertisement

சிந்து அதிர்ச்சி தோல்வி

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

தாய்லாந்தில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-7' இந்தியாவின் சிந்து, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், உலகின் 'நம்பர்-4' வீராங்கனையுமான சீனாவின் யு பெய் சென் மோதினர். முதல் செட்டை 17-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார்.



மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 17-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இது, சீன வீராங்கனைக்கு எதிராக சிந்து பெற்ற 5வது தோல்வி. இதுவரை மோதிய 11 போட்டியில் சிந்து 6, யு பெய் சென் 5ல் வென்றனர்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement