Load Image
dinamalar telegram
Advertisement

அரையிறுதியில் சிந்து: தாய்லாந்து பாட்மின்டனில்

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

தாய்லாந்தில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-7' இந்தியாவின் சிந்து, நடப்பு உலக சாம்பியனும், 'நம்பர்-1' வீராங்கனையுமான ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 20-22 என போராடி இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 21-13 என வென்றார்.



மொத்தம் 51 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து 21-15, 20-22, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இது, யமாகுச்சிக்கு எதிராக சிந்து பெற்ற 14வது வெற்றி. இதுவரை மோதிய 23 போட்டியில், சிந்து 14, யமாகுச்சி 9ல் வென்றனர்.



இன்று நடக்கவுள்ள அரையிறுதியில் சிந்து, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், உலகின் 'நம்பர்-4' வீராங்கனையுமான சீனாவின் யு பெய் சென்னுடன் மோதுகிறார்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement