Load Image
dinamalar telegram
Advertisement

ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

லண்டன்: இங்கிலாந்தின் ஆர்ச்சர், முதுகுப்பகுதி காயத்தால் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 27. இதுவரை 13 டெஸ்ட் (42 விக்கெட்), 17 ஒருநாள் (30), 12 சர்வதேச 'டி-20' (14) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், கடைசியாக கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 'டி-20' போட்டியில் விளையாடினார். முழங்கை காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட இவர், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.



காயத்தில் இருந்து மீண்டு, சசக்ஸ் அணி சார்பில் 'கவுன்டி' போட்டியில் விளையாடிய ஆர்ச்சருக்கு, முழங்கையில் வலி ஏற்பட, மீண்டும் 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதிலிருந்து தேறிய இவருக்கு, தற்போது முதுகுப் பகுதியின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சீசனில் இங்கிலாந்து அணி பங்கேற்கவுள்ள மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார். இதனையடுத்து வரும் ஜூலை மாதம் சொந்த மண்ணில் நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆர்ச்சர் விளையாடமாட்டார்.



இந்தியாவில் நடக்கும் 15வது 'டி-20' கிரிக்கெட் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மும்பை அணி சார்பில் ரூ. 8 கோடிக்கு ஒப்பந்தமான ஆர்ச்சர், காயத்தால் பங்கேற்கவில்லை. அடுத்த சீசனில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement