dinamalar telegram
Advertisement

அர்ஜென்டினாவை அசைத்தது இந்தியா: ஹாக்கி பயிற்சியில் அசத்தல்

Share

பியுனஸ் அர்ஸ்: முதல் ஹாக்கி பயிற்சி போட்டியில் அசத்திய இந்திய அணி, அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதற்காக அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய அணி, வரும் ஏப். 11, 12ல் 'நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்' அர்ஜென்டினா அணிக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு தயாராகும் விதமாக இவ்விரு அணிகள் 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன.

முதல் பயிற்சி போட்டி பியுனஸ் அர்ஸ் நகரில் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் நிலகண்ட சர்மா (16வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (28வது), ருபிந்தர் பால் சிங் (33வது), வருண் குமார் (47வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். அர்ஜென்டினா சார்பில் லியான்டிரோ டோலினி (35, 53வது நிமிடம்), மைக்கோ காசெல்லா (41வது) ஆறுதல் தந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement