LOGIN
dinamalar telegram
Advertisement

'பிளே ஆப்' வாய்ப்பு யாருக்கு * ஷேன் வார்ன் கணிப்பு

Share

துபாய்: 'ஐ.பி.எல்., தொடரின் 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்னை, மும்பை, ராஜஸ்தான், டில்லி அணிகள் முன்னேறும்,'' என வார்ன் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரின் முதல் சீசனில் (2008) ராஜஸ்தான் அணிக்கு கோப்பை வென்று தந்தவர் ஆஸ்திரேலிய சுழல் 'ஜாம்பவான்' ஷேன் வார்ன். தற்போது இந்த அணியின் துாதராக உள்ளார். இவர் கூறியது:

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியை பொறுத்தவரை எப்போதும் 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்று விடும். இந்த இடத்தில் சென்னை இல்லாததை நினைத்துப் பார்க்க முடியாது. சஞ்சு சாம்சன், ஸ்மித், டிவாட்டியா இதே போல விளையாடினால், ராஜஸ்தானும் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

பேட்டிங், பவுலிங்கில் சம பலத்தில் உள்ள மும்பை அணிக்கும் வாய்ப்புள்ளது. நான்காவதாக டில்லி அணிக்கு 'பிளே ஆப்' வாய்ப்புள்ளது.

சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரையில் இதே 'பார்ம்' தொடர்ந்தால், இந்திய கிரிக்கெட்டில் மூன்று வித அணியிலும் இடம் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement