Advertisement

தாமஸ்–உபர் கோப்பை ஒத்திவைப்பு: உலக பாட்மின்டன் அறிவிப்பு

Share

புதுடில்லி: டென்மார்க்கில், வரும் அக். 3-11ல் தாமஸ் மற்றும் உபர் கோப்பை பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்க இருந்தது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இந்தோனேஷியா, தென் கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீன தைபே, அல்ஜீரியா, சிங்கப்பூர், ஹாங்காங் என, 7 நாடுகள் விலகின. ஜப்பானும் விலகப் போவதாக தகவல் வெளியானது. தவிர, சீன நட்சத்திரங்கள் தங்கள் அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்திய வீராங்கனை செய்னா நேவல், 'கொரோனா காலத்தில் இத்தொடரை பாதுகாப்பாக நடத்த முடியுமா' என, தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உலக பாட்மின்டன் கூட்டமைப்பின் (பி.டபிள்யு.எப்.,) அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், முன்னணி நாடுகள் விலகியதால், போட்டியை நடத்தும் பாட்மின்டன் டென்மார்க் அமைப்பிடம் கலந்து ஆலோசித்து தொடரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பாட்மின்டன் டென்மார்க் சம்மதம் தெரிவித்ததால், இத்தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும், டென்மார்க் ஓபன் (அக். 13-18) திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. ஆனால் டென்மார்க் மாஸ்டர்ஸ் (அக். 20-25) ரத்து செய்யப்பட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement