Advertisement

போர்ப்ஸ் பட்டியல்: மெஸ்சி முதலிடம்

Share

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகிறது 'போர்ப்ஸ்' பத்திரிகை. இதன் சார்பில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த கால்பந்து வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, மீண்டும் முதலிடம் பிடித்தார். இவருக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ. 928 கோடி கிடைத்துள்ளது.

அடுத்த நான்கு இடங்களில் யுவன்டஸ் அணிக்காக விளையாடும் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரூ. 861.4 கோடி), பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிக்காக பங்கேற்கும் பிரேசில் வீரர் நெய்மர் (ரூ. 706.8 கோடி), பி.எஸ்.ஜி., அணியின் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (ரூ. 309 கோடி), லிவர்பூல் அணிக்காக விளையாடும் எகிப்து வீரர் முகமது சாலா (ரூ. 272 கோடி) ஆகியோர் உள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement