Advertisement

நியூசி., செல்கிறார் ஸ்டோக்ஸ் * பாக்., தொடரில் விலகல்

Share

லண்டன்: பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய ஸ்டோக்ஸ், நியூசிலாந்து செல்கிறார்.

இங்கிலாந்து அணி 'ஆல் ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் 29. கடந்த 2019 உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்லக் கைகொடுத்தார். சமீபத்தில் விண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்ற ஸ்டோக்ஸ், மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார். இவர், குடும்ப காரணங்களுக்காக நியூசிலாந்து செல்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.

ஸ்டோக்ஸ், பெற்றோர் கிறைஸ்ட்சர்ச்சில் வசிக்கின்றனர். முன்னாள் ரக்பி வீரரான தந்தை கெட் ஸ்டோக்ஸ், உடல்நலமில்லாமல் உள்ளார். இவரைக் காண ஸ்டோக்ஸ் செல்வதாகத் தெரிகிறது.

மீண்டும் இங்கிலாந்து திரும்பியதும் 15 நாள் தனிமைப்படுத்தப்பட உள்ளார். இவருக்குப் பதில் ஓலியே ராபின்சன், இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். இவர் கொரோனா உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement