Advertisement

ஜேம்ஸ் ‛கமலா' காலமானார் *கொரோனா பாதிப்புக்கு..

Share

புளோரிடா: மல்யுத்த ஜாம்பவான் ஜேம்ஸ் ஹாரிஸ் 70, காலமானார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹாரிஸ். டபிள்யு.டபிள்யு.இ., எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்தத்தில் 1980--90களில் ஆதிக்கம் செலுத்தினார். உகாண்டா காடுகளில் வேட்டையாடுபவர் தோற்றத்துடன் ‛கமலா' என்ற கதாபாத்திரத்தில் முதலில் களமிறங்கினார். பின் ‛கமலா' என செல்லமாக அழைக்கப்பட்டார். 170 கிலோ எடை, 6.7 அங்குல உயரத்துடன் மாமிச மலையாக இருப்பார். முகம், உடலில் பெயின்ட் பூச்சு, கையில் ஈட்டி, வெறும் காலுடன் ஆக்ரோஷமாக மோதுவார். ஹல்க், அண்டர்டேக்கர் போன்றவர்களை ஒருகை பார்த்தவர். 400 போட்டிகளில் பங்கேற்ற இவர், 2010ல் ஓய்வு பெற்றார்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக 2011ல் இவரது இடது கால் அகற்றப்பட்டது. 2012ல் வலது காலையும் இழந்தார். 2017ல் இருதய, நுரையீரல் பிரச்னைக்காக மிசிசிப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆக.5ல் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிர் பிரிந்தது. இவரது மறைவு மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement