Advertisement

அதிகம் தேடப்பட்ட இந்திய வீரர்கள்

Share

புதுடில்லி: உலகில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் 'நம்பர்-1' இடத்தில் உள்ளார் கோஹ்லி.

உலகளவில் பிரபல கிரிக்கெட் வீரர்கள், சிறந்த அணிகள் குறித்து 'செம்ரஷ்' என்ற தனியார் இணையதள நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி, அதிகம் தேடப்படும் வீரர்களில் 'நம்பர்-1' இடம் பிடித்துள்ளார். கடந்த ஜன., முதல் ஜூன் வரையிலான ஆய்வில், மாதத்திற்கு சராசரியாக, கோஹ்லியை மட்டும் 16.2 லட்சம் முறை, இணையதளங்களில் தேடியுள்ளனர்.

இந்த வரிசையில் 'டாப்-10' இடம் பெற்றவர்களில் 2, 3வது இடத்தில் ரோகித் சர்மா, தோனி உள்ளனர். இதில் ரோகித்தை 9.7 லட்சம், தோனியை 9.4 லட்சம் பேர் தேடினர். தவிர ஹர்திக் பாண்ட்யா (6.7 லட்சம், 7வது), சச்சின் (5.4 லட்சம், 8வது), ஸ்ரேயாஸ் ஐயரும் (3.4 லட்சம், 10வது) உள்ளனர்.

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவின் எல்லீஸ் பெர்ரி, இந்த வரிசையில் 12, 20வது இடம் பிடித்தனர்.

அதிகமாக தேடப்பட்ட அணிகள் வரிசையில் இந்தியா 'நம்பர்-1' ஆனது. மாதம் 2.4 லட்சம் முறை இந்திய அணியை இணைய தளங்களில் தேடினர். இங்கிலாந்து (66,000), ஆஸ்திரேலியா (33,000), விண்டீஸ் (29,000), பாகிஸ்தான் (23,000), தென் ஆப்ரிக்க (16,000) அணிகள் அடுத்த 5 இடத்தில் உள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement