Advertisement

'பார்முலா–1': வெர்ஸ்டாப்பன் சாம்பியன்

Share

சில்வர்ஸ்டோன்: இங்கிலாந்தில் நடந்த 70வது ஆண்டு 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நடப்பு ஆண்டின் 5வது சுற்று 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடந்தது. இதில் 'மெர்சிடஸ்', 'பெராரி' உள்ளிட்ட 10 அணிகள் சார்பில் ஹாமில்டன், செபாஸ்டியன் வெட்டல் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.

மொத்தம் 306.198 கி.மீ., துாரம் கொண்ட பந்தய இலக்கை ஒரு மணி நேரம், 19 நிமிடம், 41.993 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த 'ரெட்புல் ரேசிங் ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், சாம்பியன் பட்டம் வென்றார். இது, இந்த சீசனில் இவரது முதல் பட்டம்.

பிரிட்டிஷ் 'பார்முலா-1' போட்டியில் கோப்பை வென்ற 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன், 2வது இடம் பிடித்தார். மற்றொரு 'மெர்சிடஸ்' அணி வீரர் வால்டேரி போட்டாஸ் (பின்லாந்து) 3வது இடத்தை கைப்பற்றினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement