Advertisement

ஆஸ்டபென்கோ தோல்வி

Share

டாலின்: மெர்கோ கோப்பை டென்னிஸ் தொடரின் லீக் போட்டியில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோ தோல்வியடைந்தார்.

எஸ்தோனியாவின் டாலின் நகரில் நடக்கும் இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோ, எஸ்தோனியாவின் கொன்டாவெய்ட் மோதினர். முதல் செட்டை 2-6 என இழந்த ஆஸ்டபென்கோ, அடுத்த செட்டை 7-6 என வென்று பதிலடி தந்தார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர்-டைபிரேக்கரில்' 6-3 என முன்னிலையில் இருந்த போதும், கடைசியில் 7-10 என கோட்டை விட்டார். முடிவில் ஆஸ்டபென்கோ 2-6, 7-6, 7-10 என வீழ்ந்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement