Advertisement

விருது குழுவில் சேவக்

Share

புதுடில்லி: தேசிய விளையாட்டு விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் சேவக், சர்தார் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளான ஆக. 29ம் தேதியை, தேசிய விளையாட்டு தினமான கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில், விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', 'அர்ஜுனா', 'துரோணாச்சார்யா', 'தயான்சந்த்' உள்ளிட்ட விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் 12 பேர் கொண்டு தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவக், ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங், 'பாராலிம்பிக்' வெள்ளி மங்கை தீபா மாலிக் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இந்த தேர்வுக்குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மோனாலிசா பருவா மேத்தா, குத்துச்சண்டை வீரர் வெங்கடேசன் தேவராஜன், விளையாட்டு வர்ணனையாளர் மணீஷ் படாவியா, பத்திரிகையாளர் அலோக் சின்ஹா, நிரூ பாட்டியா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement