Advertisement

சாதிக்க தயாராக உள்ளேன் * ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா உறுதி

Share

ஹிசார்: ''மீண்டும் எப்போது போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தாலும் சாதிக்க தயாராக உள்ளேன்,'' என ஷர்மிளா தெரிவித்தார்.

இந்தியாவின் இளம் ஹாக்கி வீராங்கனை ஷர்மிளா 18. இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது பயிற்சி முகாம் இல்லாத நிலையில் ஹரியானாவின் ஹிசாரில் உள்ள தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய போட்டிகள் குறித்து இவர் கூறியது:

இந்திய அணியில் அனுபவ பயிற்சியாளர் மரிஜ்னே, சீனியர் வீராங்கனைகள் கேப்டன் ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா உள்ளிட்டோருடன் விளையாடுவது உண்மையில் எனது அதிர்ஷ்டம் தான். இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். எனது தேசத்திற்காக சிறந்த வீராங்கனையாக வரத் தேவையான மாற்றங்களை செய்து கொள்கிறேன்.

கொரோனா காரணமாக அதிகமான நாட்கள் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக உள்ளது. விரைவில் போட்டிகளில் பங்கேற்போம் என நம்பகிறேன். இருப்பினும் எனது உடற்தகுதியை தொடர்ந்து சிறப்பாக பராமரித்து வருகிறேன். எப்போது எங்களுக்கு அனுமதி கிடைத்தாலும் போட்டிகளில் களமிறங்க சாதிக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement