Advertisement

கொரோனா சோதனை: தப்பினார் கரான்

Share

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' சாம் கரான், கொரோனா சோதனையில் தேறினார்.

இங்கிலாந்து அணி சொந்தமண்ணில் விண்டீசிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் துவங்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி, பட்லர், ஸ்டோக்ஸ் தலைமையில் பிரிந்து, மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பட்லர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரானுக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கரான் தனிமைப்படுத்தப்பட்டார். இவருக்கு கொரோனா சோதனை நடந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின், ஒருவழியாக சர்வதேச கிரிக்கெட் துவங்கவுள்ள நிலையில் கரானுக்கு சோதனை நடந்தது, சக வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே நேற்று வெளியான சோதனை முடிவில் கரானுக்கு 'நெகட்டிவ்' என வந்தது. இதனால் எல்லோரும் நிம்மதி அடைந்தனர்.

702 சோதனை

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஜூன் 3 முதல் 23 வரை வீரர்கள், பயிற்சியாளர்கள், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டோர் என இதுவரை மொத்தம் 702 முறை கொரோனா சோதனை நடத்தியது. இதில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.



போப் அரைசதம்

சவுத்தாம்ப்டனில் நடந்த பயிற்சி போட்டியில் முதல் இன்னிங்சில்பட்லர் அணி 287/7 ('டிக்ளேர்'), ஸ்டோக்ஸ் அணி 233 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பட்லர் அணி 200/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஸ்டோக்ஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement