Advertisement

மாஸ்டர் செஸ்: பைனலில் அனிஷ்

Share

புதுடில்லி: மாஸ்டர் செஸ் தொடரின் பைனலுக்கு நெதர்லாந்தின் அனிஷ் கிரி முன்னேறினார்.

உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட 12 பேர் பங்கேற்கும் 'மாஸ்டர்ஸ் செஸ் பைனல்ஸ்' தொடர் நடக்கிறது. ரூ. 7.5 கோடி பரிசுத் தொகை கொண்ட இதன் பைனலுக்கு கார்ல்சன் முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ரஷ்யாவின் நெபோம்னியாட்சி மோதினர். இருவரும் தலா ஒரு செட்டில் வென்றனர். 6 சுற்றுக்கள் கொண்ட மூன்றாவது செட்டில் இருவரும் மாறி மாறி வெற்றி, டிரா செய்ய 5 சுற்று முடிவில் 2.5-2.5 என சம புள்ளிகள் பெற்றனர்.

6வது சுற்றில் அனிஷ் கிரி வெற்றி பெற்றார். இதையடுத்து அனிஷ் கிரி 3.5-2.5 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement