Advertisement

எக்ஸ்டிராஸ்

Share

* கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்திய ஓபன் கோல்ப் (மார்ச் 19-22, புதுடில்லி) தொடரை ரத்து செய்வதாக இந்திய கோல்ப் யூனியன் (ஐ.ஜி.யு.,) தெரிவித்தது.

* ஆஸ்திரிய 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்திற்கான முதலாவது பயிற்சி போட்டியில் மெர்சிடஸ் அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.



* ''ஸ்காட்லாந்து பிரிமியர் லீக் கால்பந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உடற்தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். வரும் 2022ல் சொந்த மண்ணில் ஆசிய கோப்பையில் விளையாட இருப்பதால், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்,'' என, பெண்கள் அணி கேப்டன் பாலா தேவி தெரிவித்துள்ளார்.



* ''இந்தியாவின் கோஹ்லி 10 ஆண்டுகளாகவும், பாகிஸ்தானின் பாபர் ஆசம் 4 ஆண்டுகளாகவும் விளையாடி வருகின்றனர். இவர்களது துவக்க நாட்களை ஒப்பிட்டு பார்த்தால், கோஹ்லியை விட பாபர் ஆசம் சிறந்தவராக இருப்பதை காண முடியும்,'' என, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் தெரிவித்துள்ளார்.



* முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளர் கிரான்ட் பிளவரின்,'கழுத்தில் கத்தி வைத்தார் யூனிஸ்கான்' என்ற குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கருத்து தெரிவிக்க மறுத்தது.



* பாகிஸ்தான் அணி முன்னாள் 'ஆல் ரவுண்டர்' அப்ரிதி மனைவி, 2 குழந்தைகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement