Advertisement

செஸ்: அரையிறுதியில் அனிஷ்

Share

புதுடில்லி: மாஸ்டர் செஸ் தொடரின் காலிறுதியில் அசத்திய அனிஷ் கிரி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட 12 பேர் பங்கேற்கும் 'மாக்னஸ் கார்ல்சன் செஸ்' தொடர் ஆன்லைனில் நடக்கிறது. ரூ. 7.5 கோடி பரிசுத் தொகை கொண்ட இதன் அரையிறுதிக்கு கார்ல்சன் முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிசக் மோதினர். அனிஷ் கிரி 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் மற்றொரு ரஷ்ய வீரர் நெபோம்னியாட்சியை சந்திக்கிறார்.

நான்காவது காலிறுதியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, சீனாவின் டிங் லிரென் மோதுகின்றனர். இதில் வெல்லும் வீரர், கார்ல்சனுடன் அரையிறுதியில் மோதலாம்.

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement