Advertisement

காயம் ஏற்பட வாய்ப்பில்லை * பவானி தேவி நம்பிக்கை

சென்னை: இந்தியாவின் 'நம்பர்-1' வாள்சண்டை ('பென்சிங்') வீராங்கனை பவானி தேவி 26. சென்னையை சேர்ந்த இவர், கான்பெராவில் (ஆஸி.,) நடந்த 'சீனியர்' காமன்வெல்த் 'பென்சிங்' சாம்பியன்ஷிப்பில் (2018) தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தவர்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இத்தாலியில் நிகோலா ஜனோட்டியிடம் பயிற்சியில் ஈடுபட்டார். இங்கு கொரோனா பரவல் வேகமெடுக்க நாடு திரும்பினார். இந்தியாவிலும் கொரோனா பரவல் ஏற்பட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன.

இதனால் வீட்டில் முடங்கிய பவானி, வழக்கமான 'பிட்னஸ்' பயிற்சிகளுடன், மாடியில் 'டம்மியை' வைத்து வாள் சண்டையில் ஈடுபட்டார். 'ஆன் லைன்' வழியாக எனது பயிற்சியாளர் நிகோலா அனுப்பிய வீடியோக்கள் இவரது பயிற்சிக்கு கைகொடுத்தன.

நான்காவது கட்ட ஊரடங்கில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதுகுறித்து பவானி கூறுகையில்,''நான் தனியாக பயிற்சியில் ஈடுபடுவேன். இங்குள்ள மையத்தில் அதிக இட வசதி, மரத்தினாலான தரைத்தளம் என்பதால் முழங்கால் காயம் ஏற்பட வாய்ப்பில்லை. விரைவில் எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பும் என பயிற்சியாளர் தெரிவித்தது நம்பிக்கை தருகிறது,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement