Advertisement

இந்திய ஓபன் பாட்மின்டன் எப்போது

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது.

டில்லியில், கடந்த மார்ச் 24-29ல் இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்க இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றான இத்தொடர், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடருக்கான புதிய தேதியை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) அறிவித்தது. இதன்படி இத்தொடர் டில்லியில், வரும் டிச. 8-13ல் நடக்கவுள்ளது.

மற்ற தொடர்களான ஐதராபாத் ஓபன் (ஆக. 11-16), சையது மோடி சர்வதேச (நவ. 17-22) தொடர்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நியூசிலாந்து ஓபன் (அக். 20-25), இந்தோனேஷிய ஓபன் (நவ. 17-22), மலேசிய ஓபன் (நவ. 24-29), தாய்லாந்து ஓபன் (டிச. 1-6) மற்றும் 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' (டிச. 16-20, இடம்: சீனா) உட்பட 8 முக்கிய தொடர்களுக்கு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.டபிள்யு.எப்., செயலாளர் தாமஸ் லண்ட் கூறுகையில், ''தற்போதுள்ள இக்கட்டான நிலையில், உலகம் மீண்டும் எப்போது சகஜ நிலைக்கு திரும்பும் என்று உறுதியாக கூற முடியாது. இருப்பினும் ஒத்திவைக்கப்பட்ட முக்கிய தொடர்களுக்கு புதிய தேதியை அறிவித்துள்ளோம். அப்போதுள்ள சூழ்நிலை அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படும்,'' என்றார்.

செய்னா எதிர்ப்பு

பி.டபிள்யு.எப்., வெளியிட்ட புதிய அட்டவணைக்கு செய்னா, காஷ்யப், சாய் பிரனீத் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்னா 'டுவிட்டரில்' பதிவிட்ட செய்தியில், ''வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான 5 மாதங்களில், 22 தொடர்கள் நடக்க உள்ளன. ஆனால் நாங்கள் இன்னும் பயிற்சியை துவங்கவில்லை. தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக இத்தொடர்களில் பங்கேற்க முடியுமா என்று தெரியவில்லை,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement