Advertisement

முதல் 'ஓவர்'... யார் 'சூப்பர்'

புதுடில்லி: உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களின் பைனலில் முதல் ஓவரில் பவுலர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணிகள் கோப்பை வெல்வது எளிதாகியுள்ளன.

கடந்த 2003ல் தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் நடந்தது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். இதில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்தார் ஜாகிர்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கு ஏற்ப இதன் பின் ஆஸ்திரேலியா (359/2) ரன் மழை பொழிந்தது. ஆஸ்திரேலியா சார்பில் முதல் ஓவரை வீசிய மெக்ராத் (4 ரன்/1 விக்.,), சச்சினை அவுட்டாக்க, இந்தியா 234 ரன்னுக்கு சுருண்டது.

பெண்களும் அப்படியே

சமீபத்தில் மெல்போர்னில் நடந்த பெண்களுக்கான 'டுவென்டி-20' தொடரின் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. முதலில் ஆஸ்திரேலியா களமிறங்கியது. இந்தியா சார்பில் பந்து வீசிய தீப்தி சர்மா 14 ரன்கள் விட்டுத்தந்தார். ஆஸ்திரேலியாவின் (184/4) மேகன் ஷட் முதல் ஓவரில் 3 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்த, இந்தியா (99/10) எளிதாக வீழ்ந்தது.

கோப்பை எப்படி

கடந்த 2007 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் பைனலில் (ஜோகனஸ்பர்க்) இந்தியா (157/5) இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் (152/10) அணிக்கு எதிராக முதல் ஓவர் வீசினார் ஆர்.பி.சிங் (4 ரன்/ 1விக்.,). இதில் முகமது ஹபீசை அவுட்டாக்கினார். இந்தியா கோப்பை வென்றது.

கடந்த 2011ல் மும்பையில் நடந்த உலக கோப்பை தொடரின் பைனலில் (மும்பை), இலங்கை (274/6) அணிக்கு எதிரான முதல் ஓவரை வீசிய ஜாகிர் கான், 2 ரன் மட்டும் தந்தார். தனது அடுத்த இரு ஓவரிலும் ரன் கொடுக்காமல் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். முடிவில் இந்தியா (277/4) சாதித்து கோப்பை கைப்பற்றியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement