Advertisement

பிரதமர் மோடிக்கு நன்றி: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

லாசேன்: ''டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஆதரவு வழங்கிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி,'' என, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 29ல் துவங்க இருந்தது. ஆனால் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்போட்டி அடுத்த ஆண்டுக்கு (ஜூலை 23 - ஆக. 8) ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்த 'ஜி20' தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) தலைவர் தாமஸ் பாக் கூறுகையில், ''சமீபத்தில் நடந்த 'ஜி20' தலைவர்கள் மாநாட்டில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஆதரவு கொடுத்த இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இதனை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். ஏற்கனவே கடந்த ஆண்டு ஒசாகா நகரில் நடந்த சந்திப்பில் இப்போட்டிக்கு ஆதரவு வழங்கி இருந்தீர்கள். ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு டோக்கியோ நகரம் சிறந்த இடம். இதற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement