Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் எப்போது * என்ன சொல்கிறது ஐ.ஒ.சி.,

Share

லாசேன்: ''டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை அடுத்த ஆண்டு நடத்த முயற்சிக்கிறோம். எனினும் இது கடும் சவாலானது,'' என ஐ.ஒ.சி., தலைவர் தாமஸ் பாக் தெரிவித்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ஆக. 9ல் ஒலிம்பிக் போட்டி நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வேறு வழியில்லாத நிலையில் அடுத்த ஆண்டுக்கு ஒலிம்பிக் ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் 66, கூறியது:

ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஒலிம்பிக்கில் எப்படியும் பங்கேற்க வேண்டும் என்பது தான் கனவு. எங்களைப் பொறுத்தவரையில் இந்த கனவை நிறைவேற்றுவது தான் முக்கிய வேலை.

கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்வது என்பது எந்த வகையில் சிறந்த தீர்வாக இருக்காது என துவக்கத்தில் இருந்தே தெளிவாக இருந்தோம். நீண்ட விவாதங்கள், ஆலோசனைக்கு பிறகு வேறு வழியில்லாத நிலையில் தள்ளி வைப்பது என எடுத்தோம்.

இதற்கு மிகப்பெரிய தியாகங்கள் தேவைப்பட்டன. பல்வேறு ஸ்பான்சர்களும் தங்களுக்குள் பல சமரசங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏனெனில் அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். முடிந்தவரை அடுத்த ஆண்டு ஜூலை-ஆக.,ல் போட்டியை நடத்த முயற்சிப்போம். ஒலிம்பிக் கிராமம் என்பது விளையாட்டு நட்சத்திரங்களின் இதயம் போன்றது.

இங்கு தான் ஒட்டு மொத்த உலக விளையாட்டு நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் தங்கி, தங்களது அனுபவம், உணர்வுகள், உணவுகளை பகிர்ந்து கொள்வர். தற்போது போட்டி ஒத்தி வைக்கப்பட்டதால் இதன் நிலை என்ன ஆகும் என கேள்விகள் எழுகின்றன. முடிந்தவரை சிறந்த முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement