Advertisement

ரஞ்சி: பெங்கால்–கர்நாடகா மோதல்

கோல்கட்டா: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் பெங்கால்-கர்நாடகா, குஜராத்-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பிப். 29ல் துவங்கும் அரையிறுதியில் பெங்கால், கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

பெங்கால் அணி லீக் சுற்றில் விளையாடிய 8 போட்டியில் 4 வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வி என, 32 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தது. ஒடிசா அணிக்கு எதிரான காலிறுதியில் அசத்திய பெங்கால் அணி, முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் அசத்தும் பட்சத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி கோப்பை பைனலுக்கு முன்னேறலாம். கடைசியாக 2006-07 சீசனில் தீப் தாஸ்குப்தா தலைமையிலான பெங்கால் அணி பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தது. சவுரவ் கங்குலி முதல் தர போட்டியில் அறிமுகமான 1989-90 சீசனில் பெங்கால் அணி ரஞ்சி கோப்பை வென்றிருந்தது.

பேட்டிங்கில் மனோஜ் திவாரி (651 ரன்), அனுஸ்துப் மஜும்தார் (451) நம்பிக்கை அளிக்கின்றனர். 'ஆல்-ரவுண்டராக' ஷபாஸ் அகமது (427 ரன், 30 விக்கெட்) அசத்துகிறார். பவுலிங்கில் ஆகாஷ் தீப் (25 விக்கெட்), முகேஷ் குமார் (22) கைகொடுக்கின்றனர்.

ராகுல் பலம்: கர்நாடகா அணி, லீக் சுற்றில் விளையாடிய 8 போட்டியில், 4 வெற்றி, 4 'டிரா' என, 31 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தது. ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான காலிறுதியில் அசத்திய கர்நாடகா அணி 167 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், கருண் நாயர், மணிஷ் பாண்டே இருப்பது பலம். இவர்களுடன் தேவ்தத் (583 ரன்), சமர்த் (507) கைகொடுக்கலாம். பவுலிங்கில் கிருஷ்ணப்பா கவுதம் (29 விக்கெட்), அபிமன்யு மிதுன் (27), ரோனித் மோர் (23) நம்பிக்கை அளிக்கின்றனர்.

ராஜ்கோட்டில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் குஜராத், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement