Advertisement

கோப்பை வென்றது ஆஸி.,

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் வார்னர், கேப்டன் பின்ச் அரை சதம் விளாச ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பை கைப்பற்றியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி கேப்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

வார்னர் விளாசல்

ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே சிறப்பாக அமைந்தது. வார்னர் (57), கேப்டன் ஆரோன் பின்ச் (55) அரை சதம் விளாசினர். நிகிடி பந்தில் வேட் (10) சிக்கினார். மிட்சல் மார்ஷ் (19) விரைவில் ஆட்டமிழந்தார். கேரி 7 ரன்கள் மட்டும் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் (30) அவுட்டாகாமல் இருந்தார்.

ஸ்டார்க் அசத்தல்

தென் ஆப்ரிக்க அணிக்கு பவுலர்கள் தொல்லை தந்தனர். ஸ்டார்க் 'வேகத்தில்' கேப்டன் குயின்டன், டுபிளசி தலா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாம்பா 'சுழலில்' கிளாசன் (22) சிக்கினார். மில்லர் 15 ரன்களில் திரும்பினார். ஆஷ்டன் ஏகார் பந்தில் நிகிடி டக் அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 15.3 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. அதிகபட்சமாக ஸ்டார்க், ஏகார் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வசப்படுத்தியது.



மூன்று முறை

ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக 'டுவென்டி-20' தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் 2014 (2-0), 2016ல் (2-1) தொடரை வசப்படுத்தியது.



மோசமான ஸ்கோர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 96 ரன்னில் சுருண்ட தென் ஆப்ரிக்கா, கேப்டவுனில் நடந்த 'டுவென்டி-20' போட்டிகளில், குறைந்த ஸ்கோரை (96) பெற்ற அணி என்ற மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் இங்கு, இலங்கை அணி (101, எதிர்: ஆஸி., 2007) மோசமான ஸ்கோரை பெற்றிருந்தது.



மோசமான தோல்வி

ஆஸ்திரேலியாவிடம் (97 ரன் வித்தியாசம்) வீழ்ந்த தென் ஆப்ரிக்க அணி, தனது 2வது மோசமான தோல்வியை பெற்றது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 107 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்காவின் மோசமான தோல்வியாக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement