Advertisement

தொடரை வென்றது இலங்கை

அம்பாந்தோட்டை: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் சதம் விளாச இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையில் நடந்தது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

காட்ரெல் நெருக்கடி

இலங்கை அணிக்கு காட்ரெல் நெருக்கடி தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் கருணாரத்னே (1), குசல் பெரேரா (0) அவுட்டாகினர். அவிஸ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் அபாரமாக விளையாடினர். இருவரும் சதம் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 239 ரன்கள் சேர்த்தபோது, குசல் மெண்டிஸ் 119 ரன்களில் அவுட்டானார். ஜோசப் பந்தில் பெர்னாண்டோ (127), திசரா பெரேரா (36) ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 345 ரன்கள் எடுத்தது. உடானா (17) அவுட்டாகாமல் இருந்தார். அதிகபட்சமாக காட்ரெல் 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஹோப் ஆறுதல்

விண்டீஸ் அணிக்கு துவக்கமே திணறியது. அம்ப்ரிஸ் (17), டேரன் பிராவோ (16) சொதப்பினர். சான்டகன் 'சுழலில்' ரோஸ்டன் சேஸ் (20), பூரன் (31) 'பெவிலியன்' திரும்பினர். ஷாய் ஹோப் (51) அரை சதம் கடந்தார். மற்றவர்கள் ஏமாற்ற, விண்டீஸ் அணி 39.1 ஓவரில் 184 ரன்களுக்கு சுருண்டு, 161 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஒரு போட்டி (பல்லேகெலே, மார்ச் 1) மீதமுள்ள நிலையில், இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement