Advertisement

ஷரபோவா 'குட்–பை': டென்னிஸ் அரங்கில் இருந்து....

மாஸ்கோ: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, சர்வதேச டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார்.

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா 32. இதுவரை, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஐந்து முறை (ஆஸி., ஓபன்-2008, பிரெஞ்ச் ஓபன்- 2012, 14, விம்பிள்டன்-2004, யு.எஸ்., ஓபன்-2006) கோப்பை வென்றுள்ளார். கேரியர் கிராண்ட்ஸ்லாம் (4 தொடரிலும் சாம்பியன்) கைப்பற்றிய ஒரே ரஷ்ய நட்சத்திரம். டபிள்யு.டி.ஏ., அரங்கில் ஒற்றையரில் 36, இரட்டையரில் 3 பட்டம் கைப்பற்றி உள்ளார். 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார். போர்ப்ஸ் பத்திரிகை சார்பில் வெளியிடப்படும், அதிக வருமானம் பெறும் விளையாட்டு நட்சத்திரம் பட்டியலில் பல முறை முதல் இடம் பெற்றவர்.

முன்னாள் 'நம்பர்-1' வீராங்கனையான இவர், கடந்த 2016ல் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். 15 மாத தடைக்குப்பின், மீண்டும் போட்டியில் பங்கேற்றார். ஆனால், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஜொலிக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றுடன் வெளியேறினார். தரவரிசையில், 373வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு ஷரபோவா அளித்த பேட்டியில்,'கடந்த 28 ஆண்டாக, டென்னிசுடன் இணைந்து ரசிகர்களையும் ஒரு குடும்பமாக கருதினேன். சிறு வயதிலிருந்து பயிற்சி பெற்ற டென்னிஸ் கோர்ட்டை விட்டு எப்படி வெளியேறுவது. சொல்ல முடியாத கண்ணீரை, வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியை தந்த டென்னிஸ் விளையாட்டிலிருந்து எப்படி விடை பெறுவது. என்னை மன்னித்து விடுங்கள், சர்வதேச டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன்,'என, தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement