Advertisement

செஸ்: அதிபன் வெற்றி

மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடரின் ஏழாவது சுற்றில் இந்தியாவின் அதிபன், சக வீரர் அர்ஜுனை வீழ்த்தினார்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. இதன் 'ஏ' பிரிவு ஏழாவது சுற்றில் இந்தியாவின் அதிபன், சக வீரர் அர்ஜுனை சந்தித்தார். நுணுக்கமாக செயல்பட்ட அதிபன் 60வது நகர்த்தலில், வெற்றி பெற்றார். சக இந்திய வீரரான அரவிந்த் சிதம்பரம், பரத் சுப்ரமணியத்தை தோற்கடித்தார். இந்தியாவின் கார்த்திகேயன், முரளி மோதிய போட்டி 'டிராவில்' முடிந்தது. தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் மோதிய போட்டி 'டிரா' ஆனது.

ஏழு சுற்றுகள் முடிவில், தமிழகத்தை சேர்ந்த அதிபன் 5 புள்ளிகளுடன், ரஷ்யாவின் சிஜுகிரோவ் உடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் அஜர்பெய்ஜானின் மமேதேவ் 5.5 புள்ளிகளுடன் உள்ளார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement