Advertisement

சர்வதேச விருது வென்றார் மன்பிரீத்

லாசன்னே: இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

ஹாக்கி போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.ஹெச்.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நட்சத்திரங்களை எப்.ஐ.ஹெச்., அறிவித்தது.

சமீபத்தில் வளரும் வீரர், வீராங்கனைக்கான 'ரைசிங் ஸ்டார்' விருதை இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத், லால்ரெம்சியாமி தேர்வாகினர். இந்நிலையில் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக பதிவான ஓட்டுகளில் 35.2 சதவீத ஓட்டுகள் பெற்றார். இவர், பெல்ஜியத்தின் ஆர்தர் வான் டோரன் (19.7%), அர்ஜென்டினாவின் லுாகாஸ் வில்லா (16.5%) ஆகியோரை முந்தினார்.

கடந்த 2011ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த மன்பிரீத் சிங், இதுவரை 260 போட்டிகளில் விளையாடி உள்ளார். இரண்டு முறை (2012, 2016) ஒலிம்பிக்கில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு இவரது தலைமையிலான இந்திய அணி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதுகுறித்து மன்பிரீத் கூறுகையில், ''சர்வதேச விருது வென்றது மகிழ்ச்சி. இதனை, சகவீரர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனெனில் அவர்களது உதவி இல்லாமல் இவ்விருதை பெற்றிருக்க முடியாது. எனக்கு ஆதரவாக இருந்த ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுக்கும், போட்டியில் ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கும், ஓட்டளித்தவர்களுக்கும் நன்றி,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement