Advertisement

ஆசிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

Share

மணிலா: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 1-4 என, மலேசியாவிடம் வீழ்ந்தது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'பி' பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் 4-1 என, கஜகஸ்தானை வென்றது. இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின.

ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் 18-21, 15-21 என, மலேசியாவின் லீ ஜீ ஜியாவிடம் வீழ்ந்தார். இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பிரனாய் 10-21, 15-21 என, மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவிடம் தோல்வியடைந்தார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-21, 21-16, 21-19 என, மலேசியாவின் சீம் ஜூன் வீயை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் துருவ் கபிலா, லக்சயா சென் மற்றும் அர்ஜுன், சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டன.

முடிவில் இந்திய அணி 1-4 என, தோல்வியடைந்தது. 'பி' பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடித்த மலேசியா (2 புள்ளி), இந்தியா (ஒரு புள்ளி) அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் (பிப். 14) இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement