Advertisement

குன்னேஸ்வரன், ராம்குமார் தோல்வி

Share

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் குன்னேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் தோல்வியடைந்து வெளியேறினர்.

பெங்களூருவில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 6-7, 0-6 என, பிரான்சின் பென்ஜமின் போன்சியிடம் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி 4-6, 7-5, 2-6 என, இத்தாலியின் தாமஸ் பேபியானோவிடம் வீழ்ந்தார். இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-7, 1-6 என, பெலாரசின் இலியா இவாஷ்காவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சுமித் நாகல் 3-6, 3-6 என, சுலோவேனியாவின் பிளாஸ் ரோலாவிடம் வீழ்ந்தார்.

மற்ற 3வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் சித்தார்த் ரவாத், நிக்கி பூனாச்சா தோல்வியடைந்தனர்.

பயஸ் அபாரம்: இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 7-5, 0-6, 10-7 என, சுவீடனின் ஆன்ட்ரி கோரான்ஸ்சன், இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் ரங்கட் ஜோடியை வீழ்த்தியது.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ஆஸ்திரேலியாவின் மாட் ரெய்டு ஜோடி 3-6, 6-4, 10-8 என, சீனதைபேயின் செங்-பெங், உக்ரைனின் டெனிஸ் மால்சனோவ் ஜோடியை வீழ்த்தியது.

இந்தியாவின் புரவ் ராஜா, ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-4, 6-4 என, போர்ச்சுகலில் பிரிடெரிகோ பெரெய்ரா சில்வா, செர்பியாவின் நிகோலா மிலோஜெவிக் ஜோடியை வென்றது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement