Advertisement

காலிறுதியில் இளம் இந்தியா * 41 ரன்னுக்கு சுருண்டது ஜப்பான்

புளோயம்போன்டைன்: ஜூனியர்உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. இரண்டாவது லீக் போட்டியில் ஜப்பானை 10 விக்கெட்டில் வீழ்த்தியது.

தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.

'ஏ' பிரிவில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை சந்தித்தது. தனது 36 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் களமிறங்கியது ஜப்பான். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் பிரியம் கார்க், பீல்டிங் தேர்வு செய்தார்.

பலமான இந்திய அணி பவுலர்களை சமாளிக்க முடியாத ஜப்பான் வீரர்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். கேப்டன் மார்கஸ் (1) கைவிட்டார். நோகுச்சி (7), டோபெல் (7) அதிகபட்ச ரன்கள் எடுக்க, 5 வீரர்கள் 'டக்' அவுட்டாகினர்.

22.5 ஓவரில், உதிரியாக கிடைத்த 19 ரன்கள் உட்பட, ஜப்பான் அணி 41 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் ரவி பிஷ்னாய் 4, கார்த்திக் தியாகி 3, ஆகாஷ் சிங் 2 விக்கெட் சாய்த்தனர்.

எளிய வெற்றி

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (29), குமார் (13) கைகொடுக்க, 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இலங்கை, தற்போது ஜப்பானை வென்ற இந்தியா, தற்போது 4 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது.



271

யூத் உலக கோப்பை தொடரில் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் பெற்ற வெற்றிகள் வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் பெற்றது. நேற்று 271 பந்துகள் மீதமுள்ள நிலையில் ஜப்பானை வென்றது. ஆஸ்திரேலியா முதலிடத்தில் (277 பந்து, எதிரணி-ஸ்காட்லாந்து, 2004) உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement