Advertisement

சாம்சன், பிரித்வி ஷா வாய்ப்பு

புதுடில்லி: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 'டுவென்டி-20', 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டுவென்டி-20' போட்டி ஆக்லாந்தில் வரும் 24ல் துவங்குகிறது. இதற்கான 'டுவென்டி-20' தொடரில் இடம்பெற்றிருந்த, இந்திய வீரர் ஷிகர் தவான் இடது தோள்பட்டை காயத்தால் விலகினார். இவருக்குப்பதில் கீப்பர் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார்.

ஒரு நாள் தொடரிலும் தவான் விலகியதால், இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைத்ததுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா டில்லி அணிக்காக ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விளையாடியபோது, கணுக்கால் தசை கிழிந்தது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகி உள்ளார்.

'டுவென்டி-20' அணி: கோஹ்லி (கேப்டன்), ரோகித், சாம்சன், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப், ஷிவம் துபே, குல்தீப், சகால், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, சைனி, ஜடேஜா, ஷர்துல் தாகூர்.

ஒரு நாள் அணி: கோஹ்லி (கேப்டன்), ரோகித், பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப், ஷிவம் துபே, குல்தீப், சகால், ஜடேஜா, பும்ரா, ஷமி, சைனி, ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜாதவ்.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement