Advertisement

அதிவேகமாக பந்துவீசினாரா: சர்ச்சையில் இலங்கை வீரர்

Share

புளோம்போன்டின்: ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இலங்கை வீரர் மதீசா பதிரனா மணிக்கு 175 கி.மீ., வேகத்தில் பந்துவீசியதாக கூறப்பட்டது. பின், வேகத்தை அளவிடும் கருவியில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட, இச்சாதனை அங்கீகரிக்கப்படவில்லை.

தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் முதல் லீக் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இப்போட்டியில் இலங்கையின் மதீசா பதிரனா 'வேகத்தில்' மிரட்டினார். 'அடுத்த மலிங்கா' என வர்ணிக்கப்படும் இவர், 4வது ஓவரின் கடைசி பந்தை 175 கி.மீ., வேகத்தில் வீசியதாக கருவியில் காண்பிக்கப்ட்டது. அம்பயர் 'வைடு' என அறிவித்தார். இது, கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக வீசப்பட்ட பந்தாக கருதப்பட்டது. பின், வேகத்தை அளவிடும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தவறான தகவல் பதிவானது தெரிய வந்தது. உண்மையில் இவர் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் தான் பந்துவீசியதாக தெரிகிறது. இதனால் அக்தரின் சாதனை தப்பியது.

அக்தர் முதலிடம்

கிரிக்கெட் அரங்கில் அதிவேகமான பந்துவீச்சை வெளிப்படுத்தியவர்கள் பட்டியலில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் முதலிடத்தில் உள்ளார். இவர் 2003ல் இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை ஒரு நாள் லீக் போட்டியில் மணிக்கு 161.3 கி.மீ., வேகத்தில் வீசினார்.

இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஷான் டெய்ட் (161.1 கி.மீ., எதிர்- இங்கிலாந்து, 2010), பிரட் லீ (161.1 கி.மீ., எதிர்- நியூசி., 2005) உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜெப் தாம்ப்சன் (160.6 கி.மீ., எதிர்- விண்டீஸ், 1975), ஸ்டார்க் (160.4 கி.மீ., எதிர்- நியூசி., 2015) 4, 5வது இடங்களை வகிக்கின்றனர்.











Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement