Advertisement

பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் மும்பை அணியின் மோடோ சவுகோ முதல் கோலடித்தார். இதற்கு பெங்களூரு அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் மும்பை அணி 1-0 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய மும்பை அணிக்கு 55வது நிமிடத்தில் முகமது அமின் செர்மிட்டி ஒரு கோலடித்தார். கடைசி வரை போராடிய பெங்களூரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணி 13 போட்டியில், 5 வெற்றி, 4 'டிரா', 4 தோல்வி என, 19 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி (22 புள்ளி) 2வது இடத்தில் நீடிக்கிறது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement