Advertisement

இந்தியா– நெதர்லாந்து மோதல்

புவனேஷ்வர்: புரோ ஹாக்கி லீக் தொடர் இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்களுக்கான புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. கடந்த முறை இந்திய அணி பங்கேற்கவில்லை. இரண்டாவது சீசன் இன்று துவங்கி வரும் ஜூன் 28 வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும்.

இன்று ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை சந்திக்கிறது. கடந்த சீசனில் வெண்கலம் வென்ற நெதர்லாந்து அணி (3வது இடம் ) தரவரிசையில் இந்தியாவை (நம்பர்-5) விட முன்னிலையில் உள்ளது. இதுவரை இரு அணிகள் மோதிய 10 போட்டிகளில் நெதர்லாந்து 5, இந்தியா 4 வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி 'டிராவில்' முடிந்தது.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி புவனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளது பலம். கடைசியாக இங்கு நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் ஜொலித்த இந்தியா, டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது. இந்திய தலைமைப்பயிற்சியாளர் கிரகாம் ரெய்டு ஏற்கனவே நெதர்லாந்தின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்த அணியின் பலம், பலவீனத்தை அறிந்து வைத்திருப்பது இந்தியாவுக்கு சாதகம். ஒட்டுமொத்தமாக, இத்தொடரை இந்திய வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான (ஜூலை 24- ஆக. 9, 2020) பயிற்சியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement